போதை பாக்கு, மது விற்ற 3 பேர் கைது

நாகர்கோவிலில் போதை பாக்கு, மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-05 21:53 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி ஆனைபொத்தை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 32). இவர் நாகர்கோவில் ஆராட்டுரோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகளை விற்பனை செய்ததாக வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.100 மதிப்புள்ள போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் போதை பாக்கு விற்றதாக வெள்ளமடம் கீழத்தெருவைச் சேர்ந்த வீரலட்சுமணன் (65) என்பவரை கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் கைது செய்தார். மேலும் மீனாட்சிபுரம் பகுதியில் கல்குளம் அருகில் உள்ள பண்டாரகாடு பகுதியைச் சேர்ந்த எட்வின் மிக்கேல்ராஜ் (39) என்பவர் சட்டவிரோதமாக மது விற்றதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படடன. கைது செய்யப்பட்ட 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்