சாராயம், மது விற்ற 3 பேர் கைது

கெங்கவல்லி அருகே சாராயம், மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-04-06 02:21 IST
கெங்கவல்லி:-
கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று கூடமலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். தண்ணீர்பந்தல் பகுதியில் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த மணி (வயது 45) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து 125 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
 இதேபோல் கிழக்கு காட்டு கொட்டாய் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்ற மணிகண்டன் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
மேட்டூரை அடுத்த செக்கானூர் அருகே உள்ள புதூர் காடு பகுதியில் மேட்டூர் போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர் 10 லிட்டர் சாராயம் பாக்கெட்டுகளை கடத்தி சென்றது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், பிடிபட்டவர் ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (50) என்பதும், இவர் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலமலை கிராமத்தில் பாத்திர மடுவு பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்பவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் வாங்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து பழனிச்சாமியிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்