போதை பொருட்கள் விற்ற 6 பேர் கைது

நெல்லையில் போதை பொருட்கள் விற்ற 6 பேைர போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-05 20:15 GMT
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பாளையங்கோட்டை பகுதியில் சோதனை நடத்தி, 1¼ கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை பர்கிட்மாநகரை சேர்ந்த முகமது அஸ்லாம் (வயது 23), திம்மராஜபுரத்தை சேர்ந்த துரைப்பாண்டி (24), வல்லநாடு நாணல்காட்டை சேர்ந்த ஹரிஹரன் (23) ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் பேட்டை, டவுன் பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தியபோது, 330 கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக திருவேங்கடநாதபுரம் விஜயகுமார் (42), கோவில்பட்டி நந்தித்தோப்பு பாலகிருஷ்ணன் (25), ரகுமான்பேட்டை அபுதாஹிர் (46) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போதைப்பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்