சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-05 20:09 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தா(வயது 30). இவர், 15 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றதாகவும், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது, அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சாந்தா, அந்த சிறுமியை, கீழப்பழூவூரை சேர்ந்த சந்திரா(30) என்ற பெண்ணிடம் ஒப்படைத்ததாகவும், சந்திரா அந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிலருடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து சாந்தா, சந்திரா மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வினோத்(29), பிரேம் (29), பாலு என்ற பாலச்சந்தர்(27), தங்கும் விடுதி மேலாளர் தனவேல்(58), பாலியல் தொழிலில் சந்திராவுக்கு உதவியதாக வெற்றிக்கண்ணன்(37), தெய்வீகன் (49), சிறுமி பலாத்கார சம்பவத்திற்கு, தான் பராமரித்து வரும் வணிக வளாகத்தில் இடம் கொடுத்ததாக ராஜேந்திரன்(62) மற்றும் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இந்திரா(47), தனியார் விடுதி உரிமையாளர் கண்ணன் என்ற கந்தசாமி(48) ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் விடுதியில் சிறுமியை பலாத்காரம் செய்ததாக அரியலூர் அண்ணா நகரைச் சேர்ந்த மனோஜ்குமாரை(48) நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி கைது செய்து விசாரித்து வருகிறார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்