அரியலூர் மாவட்டத்தில் 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-05 20:09 GMT
அரியலூர்:
அரியலூர் வட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்படுகிறது. மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். இருப்பினும் இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளித்தேர்வுகள் உள்பட) பொருந்தாது. அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அனுசரிப்பதால், அதனை ஈடுசெய்யும் பொருட்டு, அடுத்த மாதம்(மே) 7-ந் தேதி (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாள் எனவும் உத்தரவிடப்படுகிறது. மேலும், அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன்கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்த பணியாளர்களைக் கொண்டும் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்