பட்டதாரி பெண் தற்கொலை

சிவகாசி அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-05 19:53 GMT
சிவகாசி, 
 சிவகாசி அருகே உள்ள கொத்தனேரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் ஜெகதீஸ்வரி (வயது 20). இவர் டிப்ளமோ இன் பார்மசி படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது  ஜெகதீஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தாய் மாரீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்