விபத்தில் காவலாளி பலி

வெம்பக்கோட்டை அருகே விபத்தில் காவலாளி பலியானார்.

Update: 2022-04-05 19:38 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் இங்குள்ள பட்டாசு ஆலையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் பட்டாசு ஆலையில் பணி முடிந்து அதிகாலை 5 மணி அளவில் வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயத்துடன் கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து முருகன் மனைவி லட்சுமி (50) அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்