தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயில்

நெல்லையில் இருந்து தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக தாம்பரத்திற்கு வருகிற 17-ந் தேதி முதல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என தென்னக ெரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2022-04-05 19:17 GMT
விருதுநகர், 
நெல்லையில் இருந்து தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக தாம்பரத்திற்கு வருகிற 17-ந் தேதி முதல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என தென்னக ெரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாராந்திர ெரயில் 
 இதுபற்றி தென்னக ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:-
நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கு (வண்டி எண்-06004) சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வரையிலும் வாராந்திர எக்ஸ்பிரஸ் வருகிற 17-ந் தேதி முதல் ஜூன் மாதம் 26-ம் தேதி வரை பரீட்சார்த்த முறையில் இயக்கப்படுகிறது.
 இதேபோன்று மறுமார்க்கத்தில் ெரயில் எண் (06003) வருகிற 18-ந் தேதி முதல் ஜூன் மாதம் 27-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
 கால அட்டவணை 
இந்த ெரயில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு ராஜபாளையத்துக்கு 9.45 மணிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இரவு 10 மணிக்கும், சிவகாசிக்கு 10.15மணிக்கும், விருதுநகருக்கு இரவு 11.15 மணிக்கும் வருகிறது. விருதுநகரில் சுமார் 1 மணி நேரம் நிறுத்தப்படுவதால் மதுரைக்கு அதிகாலை 1.20 மணிக்கு வந்தடைகிறது. தாம்பரத்திற்கு காலை 9.20 மணிக்கு சென்றடைகிறது.
 மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் இந்த ெரயில் மதுரைக்கு மறுநாள் காலை 5.40-க்கும், விருதுநகருக்கு காலை 6.10 மணிக்கும், சிவகாசிக்கு 6.35 மணிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 6.50 மணிக்கும், ராஜபாளையத்திற்கு 7.05 மணிக்கும், நெல்லைக்கு காலை 10.25 மணிக்கு சென்றடைகிறது.
கோரிக்கை 
நெல்லை, விருதுநகர் இடையே கடையநல்லூர், சங்கரன்கோவில் ெரயில் நிலையங்களில் இந்த ெரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த ெரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்