நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில், சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-05 19:16 GMT
நெல்லை:
தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை, அமைப்பு செயலாளர்கள் ஏ.கே.சீனிவாசன், சுதா பரமசிவன், முன்னாள் எம்.பி. முத்துகருப்பன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி, துணைத்தலைவர் ஜெயக்குமார்,  மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் உவரி ஏ.கே.ஏ.ராஜன் கிருபாநிதி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அம்மா செல்வகுமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் கணேசன் என்ற ஜெகநாதன், சந்திரசேகர் மற்றும்  பெரியபெருமாள், பகுதி செயலாளர் ஜெனி, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா, முன்னாள் பாசறை செயலாளர் அரிகர சிவசங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.


மேலும் செய்திகள்