பாலக்காடு டவுன் விரைவு ரெயில் 3 நாட்கள் இயங்காது

பாலக்காடு டவுன் விரைவு ரெயில் 3 நாட்கள் இயங்காது

Update: 2022-04-05 18:56 GMT
திருச்சி, ஏப்.6-
சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருச்சி-ஈரோடு ரெயில் மார்க்கத்தில் லாலாபேட்டை, குளித்தலை, பெட்டவாய்த்தலை, ரெயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கபாலம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளன. எனவே திருச்சி-பாலக்காடு டவுன் இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரெயில் (எண்:16844) ஏப்ரல் மாதம் 5-ந்தேதி (நேற்று), 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதி ஆகிய 4 செவ்வாய்க்கிழமைகளிலும் திருச்சி-ஈரோடு இடையே இரு மார்க்கத்திலும் இயங்காது. பாலக்காடு டவுனில் புறப்பட்டு வரும் ரெயில் ஈரோட்டில் நிறுத்தப்படும். திருச்சி, பாலக்காடு டவுன் விரைவு ரெயில் (16843) திருச்சியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக ஈரோட்டில் இருந்து பாலக்காடு டவுனுக்கு புறப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்