குமாரபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-04-05 18:47 GMT
குமாரபாளையம்:
பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் வசிக்கும் 39 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சிந்தனைச்செல்வன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி பாஸ்கர், திருச்செங்கோடு நகர செயலாளர் சக்தி, ஒன்றிய செயலாளர்கள் எலச்சிபாளையம் முத்துகிருஷ்ணன், பரமத்தி கிள்ளிவளவன், திருச்செங்கோடு சக்தி, குமாரபாளையம் நகர துணை செயலாளர் பிரபு, லதா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்