வெப்படையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வெப்படையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஒன்றியம் எலந்தகுட்டை சின்னார்பாளையத்தில் நேற்று முன்தினம் கோர்ட்டு உத்தரவுப்படி அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பெண்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெப்படை 4 ரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள் கலந்து கொண்டு பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர் தனேந்திரன், சண்முகம், மணிகண்டன், சி.ஐ.டி.யு. தேவராஜ், மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பறிக்கப்பட்ட நிலத்தை திருப்பி தரவும், அதற்கு பட்டா வழங்கவும் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.