நாமகிரிப்பேட்டையில் ரூ.1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டையில் 2 ஆயிரத்து 500 மூட்டை மஞ்சள் ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனது.

Update: 2022-04-05 18:47 GMT
ராசிபுரம்:
மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கிளை வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம் போல் மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். 
ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள் மஞ்சளை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
ரூ.1¼ கோடிக்கு விற்பனை
இந்த ஏலத்தில் விரலி ரகம் 1,700 மூட்டைகளும், உருண்டை ரகம் 720 மூட்டைகளும், பனங்காலி ரகம் 80 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. விரலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 666 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 43-க்கும், உருண்டை ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 589-க்கும், அதிகப்பட்சமாக ரூ.8 ஆயிரத்து 69-க்கும், பனங்காலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்து 102-க்கும், அதிகப்பட்சமாக ரூ.19 ஆயிரத்து 689-க்கும் ஏலம் போனது.
மொத்தம் 2 ஆயிரத்து 500 மூட்டை மஞ்சள் ரூ.1¼ கோடிக்கு விற்பனையானது.
 2500 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 ¼ கோடிக்கு ஏலம் போனது. 

மேலும் செய்திகள்