கந்தம்பாளையம் அருகே மாரியம்மன் கோவில் தீ மிதி விழா

கந்தம்பாளையம் அருகே மாரியம்மன் கோவில் தீ மிதி விழா நடந்தது.

Update: 2022-04-05 18:47 GMT
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே நல்லூரில் மாரியம்மன், பொன்காளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் தீ மிதி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீ மிதி விழா கடந்த 3-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதிக்கும் நிகழ்ச்சி வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் தினமும் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா, விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்