குமாரபாளையம் அருகே நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்

குமாரபாளையம் அருகே நகைச்சுவை நடிகர் திடீரென மரணம் அடைந்தார்.

Update: 2022-04-05 18:47 GMT
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு அல்லிநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தனசேகரன் என்கிற லிட்டில் ஜான் (வயது 43). 3 அடி உயரம் உள்ள இவர், வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இந்தநிலையில் திருச்செங்கோடு அருகே ஒரு கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவில் தனது அறைக்கு தூங்க சென்றார். மறுநாள் காலை வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. லிட்டில் ஜான் இறுதி சடங்கு அல்லிநாயக்கன்பாளையத்தில் நடந்தது. இதில் பல்வேறு கலை குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

மேலும் செய்திகள்