கரூர்,
கரூர் தாளப்பட்டி ரங்கசாமி நகரை சேர்ந்தவர் பாத்திமா (வயது 60). இவர் கரூர் பஸ் நிலையம் அருகே கரூர்-வேலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதையடுத்து படுகாயம் அடைந்த பாத்திமாவை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாத்திமா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.