பகவதி அம்மன் கோவிலில் கிடா வெட்டு நிகழ்ச்சி
பகவதி அம்மன் கோவிலில் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.;
வேலாயுதம்பாளையம்,
காதப்பாறை ஊராட்சி அருகம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் கரகம் பாலித்து கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால், இளநீர், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 4-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று கிடா வெட்டுதலும், அதன் பின்னர் மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.