கடையம் அருகே வனப்பகுதியில் திடீர் தீ
கடையம் அருகே வனப்பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
கடையம்:
கடையம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட மத்தளம்பாறை வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கெண்டி ஊத்து என்ற இடத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் மரம், செடி மற்றும் புற்களில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பக பிரியா, பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் ராதை ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை களப்பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவர்கள் 4 குழுக்களாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.