மனைவியின் தலையில் பாட்டிலால் தாக்கிய விவசாயி கைது
தேவதானப்பட்டி அருகே மனைவியின் தலையில் பாட்டிலால் தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள வேல் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 36). விவசாயி. இவரது மனைவி லதா (33). தங்கப்பாண்டி தனது மனைவி மீது அடிக்கடி சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தங்கப்பாண்டி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது அவர் வீட்டு முன்பு அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருப்பதை பார்த்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் பற்றிய தீயை அணைத்தனர்.
இதையறிந்து வீட்டில் இருந்து வெளியே வந்த லதாவின் தலையில் தங்கப்பாண்டி பாட்டிலால் தாக்கினார். இதில் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் லதா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தங்கப்பாண்டியை கைது செய்தனர்.