கம்பைநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு

கம்பைநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் இறந்தார்.

Update: 2022-04-05 18:13 GMT
மொரப்பூர்:
கம்பைநல்லூர் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் தணிக்கைவேலன் (வயது 24) இவர் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று தனது விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது தணிக்கைவேலன் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பைநல்லூர் போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் நடத்திய விசாரணையில் மாணவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்