பெரும்பாலை அருகே மின்கசிவால் வீடு எரிந்து சாம்பல்

பெரும்பாலை அருகே மின்கசிவால் வீடு எரிந்து சாம்பலானது.

Update: 2022-04-05 18:13 GMT
ஏரியூர்:
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள பாசி பாளிக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி ராணி. இவர்கள் 2 பேரும் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு பெரும்பாலை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றனர். மதியம் திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பென்னாகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  இதில் வீடு முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் வீட்டில் பீரோவில் இருந்த பணம், உணவு பொருட்கள், மின்சாதன பொருட்கள் எரிந்து கருகின. இதுகுறித்து பெரும்பாலை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்தது தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்