பாப்பிரெட்டிப்பட்டி அருகே கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-05 18:13 GMT
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் 900 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வெங்கடசமுத்திரத்தை சேர்ந்த ஜலீல் (வயது22), பாப்பிரெட்டிப்பட்டி திரு.வி.க. நகரை சேர்ந்த நசுருதீன் (20) என்பதும், விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்