சொத்து தகராறில் முதியவரை தாக்கிய கல்லூரி மாணவர் கைது
சொத்து தகராறில் முதியவரை தாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
காவேரிப்பட்டணம்:
நாகரசம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 62). அதேபகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (21). இவர் கல்லூரி ஒன்றில் முதுகலை படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 3-ந் தேதி விக்னேஷின் பாட்டி புனிதாவிடம் குடும்ப சொத்தை பிரித்து தருமாறு கூறி விக்னேஷ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதை அங்கிருந்த புனிதாவின் உறவினரான மாணிக்கம் தட்டிக்கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் விக்னேஷ், மாணிக்கத்தை மரக்கட்டையால் அடித்து தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் விக்னேசை கைது செய்தனர்.