மீனாட்சி சொக்கநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது மீனாட்சி சொக்கநாத சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவானது வருகிற 16-ந்தேதி வரையிலும் நடைபெறுகின்றது.
திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை கோவிலின் நந்தி சிலை அருகே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை, பூஜைகளும் நடைபெற்றன.
இதைதொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாணம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 14-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 10 மணியிலிருந்து 11.30 மணிக்குள் மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக 16-ந் தேதி சாமி தீர்த்தவாரி மற்றும் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.