சிங்காரப்பேட்டை அருகே மூதாட்டியை தாக்கிய மகன் கைது

சிங்காரப்பேட்டை அருகே சொத்து தராத மூதாட்டியை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-05 18:12 GMT
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை அருகே உள்ள எக்கூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி (வயது 65). இவரது மகன் செந்தில்குமார் (40). கடந்த 3-ந் தேதி இந்திராணி பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி தருமாறு மகன் செந்தில்குமார் மற்றும் மருமகள் ராணி (37) ஆகியோர் கேட்டனர். இதற்கு இந்திராணி மறுப்பு தெரிவித்ததால் அவரை தாக்கினார்கள். இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்