அரக்கோணத்தில் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

அரக்கோணத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-05 18:11 GMT
அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டை அண்ணா சிலை அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா செயலாளர் சீனிவாசன் தலைமையில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பொது தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் சி.துரைராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஞானமுருகன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ்விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பொன்.சிட்டி பாபு, பார்த்திபன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்