தனியார் நிறுவன அதிகாரியின் மடிக்கணினி திருட்டு
ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியின் மடிக்கணினி திருட்டு போனது.
ஓசூர்:
ஓசூர் குமரன் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 52). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை ஓசூரில் அரசு ஆஸ்பத்திரி சாலையில் உள்ள ஒரு மருத்துவமனை முன்பு நிறுத்தி விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வந்து பார்த்த போது மடிக்கணினி திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.