சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2022-04-05 17:53 GMT
மயிலாடுதுறை
சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தமிழன் வரவேற்று பேசினார்.   ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், இந்த வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 இதில், மாவட்ட துணைச் செயலாளர் செல்லையன், ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட பேரவை இணை செயலாளர் ஆனதாண்டவபுரம் முருகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்