மர்ம நோயால் செத்து மடியும் கால்நடைகள்
மர்ம நோயால் கால்நடைகள் செத்து மடிகின்றன
சீர்காழி
சீர்காழி அருகே உள்ள மருதங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகள் கடந்த சில நாட்களாக மர்ம நோயால் செத்து மடிகின்றன. இதனால், கால்நடை வளர்ப்போர் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். நேற்றுகூட மருதங்குடி கீழத் தெருவை சேர்ந்த ரங்கசாமி என்பவரது கன்றுக்குட்டி திடீரென மர்ம நோயால் செத்தது. இதுகுறித்து ரங்கசாமி கூறுகையில், மருதங்குடி ஊராட்சி பகுதியில் மர்ம நோயால் கால்நடைகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன. ஆகவே, இப்பகுதியில் கால்நடைத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.