அன்னவாசல் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், மேலத்தானியத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் அந்தமானில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அந்தமானில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அவர் இன்று அன்னவாசல் அருகே கிளிக்குடி, பேயாலில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மகனுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது குமார் கிணற்றில் தவறி விழுந்து மூழ்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி குமாரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.