வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
விராலிமலை:
விராலிமலை தாலுகா கொடும்பாளூர் சத்திரத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 48). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக இரண்டு வீடுகள் அருகருகே உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் செல்வம் இரவு ஒரு வீட்டில் தூங்கியுள்ளார். அடுத்த நாள் காலை எழுந்து மற்றொரு வீட்டிற்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த செல்வம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.