முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மிரட்டுநிலையில் மாட்டு வண்டி பந்தயம்
முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மிரட்டுநிலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.;
அரிமளம்:
மாட்டு வண்டி பந்தயம்
அரிமளம் அருகே மிரட்டுநிலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், அறந்தாங்கி, சிவகங்கை, காரைக்குடி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
பரிசு
பந்தயமானது பெரியமாடு, கரிச்சான் மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும், இரண்டாவதாக நடைபெற்ற கரிச்சான் மாடு பந்தயத்தில் 30 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன.
இரண்டு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்ற அரிமளம்- புதுக்கோட்டை சாலையில் இருபுறமும் மக்கள் திரளாக நின்று கண்டு ரசித்தனர். பந்தயத்திற்கான ஏற்பாடுகளை மிரட்டுநிலை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். அரிமளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.