காரில் கடத்திய 800 லிட்டர் சாராயம் பறிமுதல்

குத்தாலம் அருகே காரைக்காலில் இருந்து காரில் கடத்திய 800 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-05 17:38 GMT
குத்தாலம்
 குத்தாலத்தை அடுத்த பெரம்பூர் பகுதியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில், மங்கநல்லூர் கடைவீதியில் பெரம்பூர் (பொறுப்பு) போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ராமேரி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மூட்டை, மூட்டையாக காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து காரில் இருந்த 480 மது பாட்டில்கள் மற்றும் 800 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் மீது வழக்கு
இதுதொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த சந்திரபாடி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் மற்றும் அவருடன் வந்த வரிச்சிகுடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்