அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வு மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை ரத்து செய்த தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி சொத்து வரி உயர்வை கண்டித்தும், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை ரத்து செய்த தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன உரையாற்றினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ, அமைப்புச் செயலாளர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழகுவேல்பாபு, பிரபு, ஒன்றிய செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், அரசு, அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யம்பெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், தியகதுருகம் நகர செயலாளர் ஷியாம் சுந்தர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.