விவசாயியை உருட்டுக்கட்டையால் தாக்கியவர் கைது

விவசாயியை உருட்டுக்கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-05 17:20 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் குனிச்சூர் பகுதியை சேர்ந்தவர் சின்ன பெருமாள். இவரது மகன் வேலு (வயது 45). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் ராஜாவுக்கும் (வயது 40) இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.
இந்த நிலையில் வேலு  ராஜா வீட்டின் அருகே அசுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்கவே இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது அப்போது ராஜா மனைவி சரிதா என்பவர் தனது கணவர் ராஜாவுக்கு ஆதரவாக பேசினார்.

இதனால் இருவருக்கும் தகராறு முற்றியதில் உருட்டுக்கட்டையால் கணவன், மனைவி இருவரும் வேலுவை தாக்கியதாக கூறப்படுகிறது. 
படுகாயம் அடைந்த வேலு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வேலு கொடுத்த புகாரின்பேரில் ராஜாவை நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சரிதாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்