இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்டிரைவர் கைது

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்டிரைவர் கைது

Update: 2022-04-05 17:13 GMT
பல்லடம்:
 பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் பகுதியை சேர்ந்த  டிரைவர் ராஜன் (வயது 60). இவர் தனியாக இருந்த 21 வயது இளம் பெண்ணை வீடு புகுந்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். 
 அதற்குள் ராஜன் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதையடுத்து  பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலியல்  அத்துமீறலில் ஈடுபட்டு தப்பி ஓட முயன்ற ராஜனை பிடித்து பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பல்லடம் அனைத்து மகளிர் போலீசார்  ராஜனை கைது செய்தனர். பின்னர் அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்