முதியோர் உதவித்தொகை மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வுகாண வேண்டும். கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு
முதியோர் உதவித்தொகை மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வுகாண கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் அனைத்து தனி தாசில்தார்களுக்கான ஆயவுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், ‘ஆன்லைன் மூலம் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மனுக்களின் மீது 30 நாட்களுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மனுக்களை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக தீர்வு காண வேண்டும். ஆன்லைன் மூலம் முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்களை நிராகரிக்கும் போது உரிய காரணங்கள் குறிப்பிட வேண்டும். முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களும் விடுபடாமல் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூரத்தி, அனைத்து தனி தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.