இருதரப்பினர் இடையே மோதல் 11 பேர் கைது
வேலூரில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்
வேலூரில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இருதரப்பினர் மோதல்
வேலூர் கலாஸ்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22). இவர், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் பானிபூரி சாப்பிட சென்றார்.
அப்போது சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த மகபூப்பாஷா, முகமது ஆகியோர் தங்களது நண்பர்களுடன் அங்கு வந்திருந்தனர்.
அப்போது மகபூப்பாஷா தரப்பினருக்கும், விக்னேஷூக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மகபூப்பாஷா, அவரது நண்பர்கள் சேர்ந்து விக்னேஷை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் இதுகுறித்து தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்களான காட்வின் (20), ஆகாஷ் (19) மற்றும் 3 சிறுவர்கள் அங்கு வந்து, எதிர்தரப்பினரை தாக்கியதாக தெரிகிறது.
11 பேர் கைது
இந்த தாக்குதல் சம்பவம் கோஷ்டி மோதலாக மாறியது. பின்னர் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் வேலூர் வடக்கு போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பை ேசர்ந்த முகமது, மகபூப்பாஷா, அமீர், பையதுல்லா, பைரோஸ் மற்றும் விக்னேஷ், காட்வின், ஆகாஷ் உள்பட 11 பேரை கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.