வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
சொத்துவரி உயர்வை கண்டித்து வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் குடியாத்தத்தில் நடந்தது
குடியாத்தம்
சொத்துவரி உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து இன்று குடியாத்தம் தாலுகா அலுவலகம் எதிரே வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் த.வேலழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சி.எம்.சூரியகலா, ஜி.லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் வி.ராமு, டி.சிவா, சீனிவாசன், பிரபாகரன், சுரேஷ், ஆனந்தன், ராகவன், மாவட்ட பொருளாளர் ஜி.பி.மூர்த்தி, குடியாத்தம் நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, முன்னாள் நகரமன்ற தலைவர்கள் எம்.பாஸ்கர், எஸ்.அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சொத்துவரி உயர்த்தியதை கண்டித்து கோஷமிட்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஆர்.மூர்த்தி நன்றி கூறினார்.