ரூ2 லட்சம் போதை பொருட்கள் காருடன் பறிமுதல்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ2 லட்சம் போதை பொருட்கள் காருடன் பறிமுதல்

Update: 2022-04-05 16:52 GMT
அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம், தலைமை காவலர் விநாயகம் மற்றும் போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர். 

இன்று அதிகாலையில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். 

காரில் 20 மூட்டைகளில் குட்கா, கூல்லிப், ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட 335 கிலோ போதை பொருட்கள் இருந்தன. பின்னர் போலீசார் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை காருடன் பறிமுதல் செய்தனர். 

அதைத் தொடர்ந்து போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தை சேர்ந்த சாவாய் சிங் (வயது 31) என்பதும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் போதை பொருட்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

 இதனையடுத்து போலீசார் சாவாய் சிங்கை கைது செய்தனர். 

பின்னர் பெங்களூருவில் யாரிடம் இருந்து போதை பொருட்கள் கடத்தி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக அவரை பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர். 

மேலும் செய்திகள்