நாகூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
நாகூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது;
நாகூர்:
நாகூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை திரவுபதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மகளிர் அணி குழுவினர்கள் செய்து இருந்தனர்.