வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

மோட்டார்சைக்கிள்களை திருடி வந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-05 16:43 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வாணியம்பாடியை சுற்றி மோட்டார்சைக்கிள் திருட்டு, தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கோணாமேடு பகுதியை சேர்ந்த ராகுல் என்கின்ற சுபாசை (வயது 23) போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதை தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் சுபாசை குண்டர் சட்டத்தில் கைது செய்து கலெக்டர் அமர்குஷ்வாகா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்