திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார்தேடி வருகின்றனர்.

Update: 2022-04-05 16:38 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூரை அடுத்த துரை நகர் பகுதியை சேர்ந்தவர் அரசு குமார் (வயது42), தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதிக்குக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில்மர்ம நபர்கள், அரசுகுமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஒரு பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர். சென்றுள்ளனர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் அரசுகுமாருக்கு தகவல் தெரிவித்தார். 

உடனடியாக வீடு திரும்பிய அரசுகுமார் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு காட்சியை பார்த்தபோது மர்ம நபர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை கடப்பாறையால் உடைத்து உள்ளே வருவது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல் அதே பகுதியில் உள்ள நாராயணசாமி என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து திருட முயன்றுள்ளனர்.

அரசுகுமார் திருப்பதிக்கு செல்லும்போது வீட்டில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி நகைகளை எடுத்துச்சென்று ஜலகாம்பாறையில் உள்ள தனது பூர்வீக வீட்டில் வைத்துவிட்டு சென்றதால் திருட்டு போகாமல் தப்பியது.

மேலும் செய்திகள்