1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2022-04-05 16:37 GMT
கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள நாராயணபட்டி, கிணத்தூர், கொடமாத்தி உள்ளிட்ட வனப்பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கரியாலூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கொடமாத்தி வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாராய ஊறலை கீழே கொட்டி போலீசார் அழித்தனர். 

மேலும் செய்திகள்