சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-05 16:26 GMT
ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 23). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாயார் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவுசெய்து அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்