குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
குலசேகரம் அருகே உள்ள நாகக்கோடு பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (வயது 66). இவர் மனைவி, பிள்ளைகளுடன் பூதப்பாண்டி அருகே மேல திடல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் காலையில் தாமஸ் அந்த பகுதியில் உள்ள நைனாகுளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது தாமஸ், தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.