பாரம்பரிய உணவு திருவிழா

கீழ்வேளூரில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.

Update: 2022-04-05 15:56 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் உயர்நிலைப் பள்ளியில் கீழ்வேளூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. விழாவுக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பவானி தலைமை தாங்கினார். விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற பாரம்பரிய சிறுதானியங்களில் செய்த இனிப்பு வகைகள், கார வகைகள், பிரியாணி, கூழ் போன்ற உணவு பொருட்களை மாணவிகளுக்கு வழங்கினர். மேலும் சிறுதானிய உணவுகளின் சத்து மற்றும் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்து கூறினர். விழாவில் காய்கறி மூலம் விலங்குகள், சிலைகள், பூக்களை வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பூர்ணியா, வட்டார திட்ட உதவியாளர் அருண்குமார், மேற்பார்வையாளர்கள் ஜெயலட்சுமி, பிரேமநாயகி, கீழ்வேளூர் ஒன்றிய அனைத்து கிராம அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்