போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்

போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்

Update: 2022-04-05 15:54 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் மணி மகன் சுரேந்தர் என்கிற பகவதி சுரேந்தர் (வயது 35). இவர் மீது விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கும், 2015-ம் ஆண்டு கொலை வழக்கு மற்றும் தாலுகா போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2016-ம் ஆண்டு நாட்டு வெடிகுண்டு வீசி கொலை வழக்கும் உள்ளது. இவ்வழக்குகளில் சுரேந்தர், கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. மேலும் சுரேந்தரை கைது செய்து ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சுரேந்தரை போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார், தன்னை தேடுவதை அறிந்த சுரேந்தர், நேற்று விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். தொடர்ந்து, கோர்ட்டு உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்