மின்சாரம் தாக்கி விவசாயி பலி
வளவனூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானாா்.
வளவனூர்,
வளவனூர் அருகே சின்னகள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலிவரதன்(வயது 65). விவசாயி. இவர் தனது விளைநிலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார். பின்னர் மோட்டார் கொட்டகைக்கு சென்றபோது கீழே கிடந்த மின் ஒயரை எதிர்பாராமல் மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் கலிவரதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.