கஞ்சா விற்ற 3 பேர் கைது
விழுப்புரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 26) என்பவரை விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் சின்னபாபு சமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்ற அதே கிராமத்தை சேர்ந்த சசிக்குமார்(24) என்பவரை கண்டமங்கலம் போலீசாரும், ஆ.கூடலூர் பகுதியில் கஞ்சா விற்ற அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் (28) என்பவரை காணை போலீசாரும் கைது செய்தனர். கைதான இவர்கள் இருவரிடம் இருந்தும் தலா 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.